மொத்த விலை பணவீக்கம் உயர்வு!

இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரித்ததால், மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த அக்டோபர் மாதத்தில் 0.16 சதவிகிதமாக இருந்த குறியிட்ட எண் நவம்பர் மாதத்தில் 0.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 4.47 சதவிகிதம் உயர்வை பெற்றுள்ளது.

மொத்த விலை பணவீக்கம் உயர்வு! 1

அதேபோல, மொத்த காய்கறிகளின் விலை முந்தைய மாதத்தில் 38.91 சதவிகிதமாக இருந்தது. இது தற்போது 45.32  சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வெங்காய விலையும் 172.30 சதவிகிதமாக உயர்ந்தது. இது முந்தைய மாதத்தில், 119.84 சதவிகிதமாக இருந்தது.

இதேவேளையில் மற்ற உணவு பொருட்களின் விலையும், 9.80 சதவிகிதத்திலிருந்து 11.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெளியான சில்லறை பணவீக்கம் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாதத அளவிற்கு 5.54 சதவிகிதமாக உயர்வை சந்தித்துள்ளது. மேலும் இத்தகைய மொத்த உணவு பொருள் பணவீக்கம் கடந்த 71 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்