நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தற்போது தனது வருங்கால கனவுருடன் இணைந்து தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் விரைவில் உடல் எடையை குறைத்து உங்கள் மாமாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று சொல்லி அவருக்கு கமெண்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சி மூலமாக தனது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி பல மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். பின்னர் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கும் ரோபோ சங்கருக்கு 2013 ஆம் ஆண்டு வெளியான யாருடா மகேஷ் திருப்புமுனையை கொடுத்தது. அதன் பின்னர் இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், கப்பல், மாரி, திரிஷா இல்லனா நயன்தாரா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், இரும்புத்திரை, கலகலப்பு 2, விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கோடை மற்றும் தமிழரசன் ஆகிய இரு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அதிக குடியால் மஞ்சள் காமாலை வந்து உடல் எடை மெலிந்து மிக ஒல்லியாக காட்சி தருகிறார் ரோபோ சங்கர். இந்த நிலையில் இவரது மகள் இந்திரஜா சங்கருக்கும் அவரது முறை மாமனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்திரஜா ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் பங்கெடுத்திருக்கிறார்.
தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கிய திகில் படத்தில் பாண்டியம்மாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விருமன் படத்தில் நடிகை அதிதி சங்கருக்கு தோழியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது முறை மாமனான கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் இணைந்து உடல் எடையை குறைக்க இந்திரஜா ஜிம்மில் தீவிர உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் உடல் எடையை குறைத்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!
Youtube Video Embed Code Credits: RD Fitness Unlimited