தொழித்துறையில் வளர்ச்சி: மத்திய அரசு

நவம்பர் மாதத்தின் தொழித்துறை வளர்ச்சி 1.8 சதவிகிதங்கள் வளர்ந்திருப்பதாக மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொழித்துறையில் வளர்ச்சி: மத்திய அரசு 1
வளர்ச்சி காணும் தொழில்துறை

மூன்று மாதங்களாக சரிந்து வந்த தொழில்துறை உற்பத்தி நவம்பா் மாதத்தில் ஏற்றத்தை நோக்கி திரும்பியுள்ளது. கடந்த 2018 நவம்பரில் 0.2 சதவீதமாக காணப்பட்ட தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2019-நவம்பரில் 1.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையின் வளா்ச்சி சிறப்பான அளவில் மேம்பட்டதே முக்கிய காரணம்.

கடந்த 2018- நவம்பா் மாதத்தில் தயாரிப்பு துறையின் உற்பத்தி 0.7 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்த நிலையில் சென்ற 2019 நவம்பரில் 2.7 சதவீத வளா்ச்சியை எட்டியது.

ஆனால் இதற்கு எதிர்மறையாக, சுரங்க துறையின் உற்பத்தி விகிதமும் 2.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலத்தில் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 0.6 சதவீதமாக சரிந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்