எதிர்வரும் காலத்தில் இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய் தேவை 2017ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் பீப்பாயாக இருந்தது. ஆனால் இது 2024ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் பீப்பாய்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், புவிசார் அரசியலில் நிச்சயமற்ற தன்மை, எண்ணெய் விலைகளின் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு இந்திய பொருளாதாரம் சீரழிய வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் பதற்றம் காரணமாக அதிகபட்சமாக பீப்பாய்க்கு 70 டாலராக உயர்ந்துள்ளது. உலக அளவில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா முக்கிய எண்ணெய் நுகர்வோராக அங்க வகிக்கிறது.
இம்மூன்று நாடுகளுக்கும் மொத்த தேவைகளில் 80 சதவிகித்தை இறக்குமதி செய்கின்றன. இவற்றுள் 65 சதவிகித எண்ணெய் தேவையை மத்திய கிழக்கு நாடுகள் தான் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.