எங்களது தவறை மன்னிக்க முடியாது! ஈரான் அதிபர் ரவுகானி வருத்தம்!!

எங்களது தவறை மன்னிக்க முடியாது! ஈரான் அதிபர் ரவுகானி வருத்தம்!! 1

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் உருவாகும் அபாயம் உள்ள நிலையில் ஈரான் நாட்டு ராணுவம் உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இது குறித்து விசாரணையில் உக்ரைன் விமானம் பரபரப்பு நிறைந்த பகுதியில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த விமான‌ம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் அதிபர் ரவுகானி வருத்தம் தெரிவித்தார்.

இது தொட‌ர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அந்நாட்டு செய்தி தொடர்பில் கூறுகையில், ”அப்பாவி மக்கள் 176 இறந்ததற்காகவும் ஈரான் அரசு பொது மக்களுக்கு இழைத்த தவறுக்காகவும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

விளம்பரம்

மேலும் அவர் கூறுகையில், எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனிருக்கும் என்று ஆறுதல் கூறும் வகையில் பேசினார். இதன் மூலம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மன்னிக்க முடியாத இந்த தவறு குறித்து சட்ட ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment