தேர்தல் கள வியூகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பெக் நிறுவனம் அரவிந்த் கெஜரிவாளின் ஆம் ஆத்மி கட்சிக்கு கட்சிக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் இந்திய பொதுத்தேர்தலில் மோடிக்காக வேலைப் பார்த்து வந்த ஐ-பெக் நிறுவனம், உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற ராகுலின் விவசாயிகள் ஆதரவு பேரணிக்கு உத்திகளை வகுத்து தந்தது. மேலும் பீகாரில் நிதிஷ் குமார், ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆகியோர் வெற்றி பெறவும் பிரசாந்த் கிஷோரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

தற்போது இந்த நிறுவனம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக போன்ற கட்சிகளுக்கும் கள ஆய்வில் செய்து வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பி.கே.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ-பெக் நிறுவனம் நம்மோடு இணைத்து பயணிக்க இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களை பெற்று பெரும்பான்மையுடம் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரசாந்த் கிஷோர் பீகாரில் மாநில கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக உள்ளார் என்பது கூடுதல் தகவல்.