ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறும் பொழுது மூளையை ஒரு சதவீதம் கூட பயன்படுத்தாமல் இந்த படத்தை எடுத்திருப்பதாக கூறினார். ஹீரோவும் ஹீரோவின் நண்பரும் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து இளம் பெண்கள் கொலை செய்யபடுகின்றனர். சீரியல் கில்லர் தான் இந்த கொலைகளை செய்வதாக கண்டுபிடிக்கும் இருவரும் அவரைத் தேடி செல்கின்றனர். அப்போது நடந்த விபத்தில் ஹீரோவின் நண்பர் இறந்து விடுகிறார். பின்னர் ஹீரோவும் தனது வேலையை விட்டுவிட்டு நண்பரின் குடும்பத்துடன் செட்டில் ஆகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சீரியல் கில்லர் பெண்களை கொல்லத் தொடங்கி இருப்பதை அறிந்து கொள்ளும் ஹீரோ, போலீஸ் துறையில் வேலைக்கு சேராமலேயே அவரை கண்டுபிடிக்க தொடங்குகிறார். இந்த படத்தை பார்க்கும் பொழுது பல கொரியன் டிவிடிகளை வாங்கி போட்டு ஒவ்வொரு காட்சிகளை ஒவ்வொரு படத்தில் இருந்து எடுத்து எடுத்தது போல இருந்தது. 10% கூட மூளையை பயன்படுத்தாமல் இந்த படத்தை எடுத்துள்ளனர். வில்லனை பார்த்தால் பயம் வரவேண்டும், கொலை செய்யப்படுபவர்களை பார்த்தால் பரிதாபம் வரவேண்டும். ஆனால் எதுவுமே இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு லாஜிக்கே இல்லாத படம். காவல்துறையில் புத்திசாலித்தனமான ஒரு போலீஸ் கூட இல்லை என்பது போல காட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது பாதியில் காட்டப்படும் வில்லன் எந்த ஒரு உணர்ச்சியுமே கழகாட்டாமல் இருக்கிறார். காவல்துறையில் எப்படி எல்லாம் நடக்கும் என்பதை ஆய்வே செய்யாமல் இந்த படத்தை முழுக்க முழுக்க எடுத்துள்ளனர் என்று தனது விமர்சனத்தை கூறினார். நீங்களும் அவரது விமர்சனத்தை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies