நேற்று வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வழக்கம்போல அவர் இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். அவர் கூறியதாவது, சந்திரமுகி 1 படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து இந்த படத்தை எடுத்துள்ளார்கள். ஈயம் பூசின மாதிரி இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்று சொல்லி படத்தையே காலி பண்ணி விட்டார்கள். இந்த படத்தை கண்ணைக் கொண்டு பார்க்க முடியவில்லை. ராகவா லாரன்ஸ்க்கு தலைவர் சாயல் வந்து விட்டதாக இயக்குனர் பி.வாசு கூறினார். ஆனால் அவருக்கு தலைவர் சாயல் வரவில்லை, பாலகிருஷ்ணா சாயல் தான் வந்திருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது ஒரு சண்டைக் காட்சியில் தியேட்டரே குபீரெனை சிரித்து விட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி படத்தை எடுக்க சொன்னால் சந்திரமுகி Spoof செய்து ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். கலாய்க்க கூட தகுதி இல்லாத படமாக இருக்கிறது. வேட்டையன் செங்கோட்டையன் என இரண்டு நபர்களாக வந்து மக்களை குழப்பி இருக்கிறார்கள். வடிவேலுவின் காமெடி ஒரு துளி கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. பாகம் 1-ல் வித்யா சாகர் எப்படி இசையமைத்திருப்பார்? அதை கொஞ்சம் கூட கீரவாணியால் நிரப்ப முடியவில்லை. அதேபோல் ஜோதிகாவின் நடிப்பை கங்கனவால் ஈடுகட்ட முடியவில்லை. வழக்கமான லாரன்ஸின் பேய் படமாகவும் இல்லாமல், சைக்கோ த்ரில்லராகவும் இல்லாமல் ஏதோ புது மாதிரியான படமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் அடிக்கடி இந்த திசை பக்கம் போய்விடாதீர்கள் என்று சொல்வார்கள். நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்த படம் ஓடும் தியேட்டருக்கு மட்டுமல்ல, தியேட்டர் இருக்கும் திசை பக்கம் கூட போய்விடாதீர்கள் என்று தனது விமர்சனங்களை முன் வைத்தார். அவரின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies