Categories: உலகம்

தவறுதலாக சுடப்பட்ட விமானம்: ஈரான் ஒப்புதல்

உக்ரைன் நாட்டு விமானம் தவறுதலாக சுட்டுக் வீழ்த்தப்பட்டது என ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 8-ம் தேதி புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிஸ் ரக விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சுமார் 180 பேர் பலியாகினர்.

Plane clash at iran

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்திற்கு காரணம் ஈரான் ராணுவம் தான் என்ன அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதுமட்டுமின்றி ஈரான் நாட்டு ஏவுகணை விமானத்தை தாக்குவது போன்ற வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் ஈரான் மீது சந்தேகத்தை எழுப்பின. ஆனால் ஈரான் நாட்டு அரசு தொடக்கத்திலிருந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனித தவறு காரணமாக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்