Categories: சினிமா

1947 படக்குழுவினருடன் செம்ம அலப்பறை செய்த இர்பான்.! அயோ சிரிச்சு முடியல, செம்ம காமெடியான வீடியோ

வெளியிட்டது

கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் நடித்து வரும் 1947 படக் குழுவினருடன் தற்போது உணவுகளை ருசி பார்த்து ரிவ்யூ சொல்லும் youtubeரான இர்ஃபான் தற்போது பேட்டி ஒன்றை எடுத்திருக்கிறார். மிக காமெடியான அந்த பேட்டியில் அவர்கள் படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர். கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் 1947. இந்த படம் சுதந்திரத்தின் போது சில கிராமங்களுக்கு சுதந்திரம் கிடைத்த விஷயம் கூட தெரியாமலேயே இருந்தது. அப்போது அந்த மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள்? அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்து பற்றி தெரிந்ததா? இல்லையா? என்பது பற்றி ஒரு கற்பனையான கதை கொண்ட திரைப்படம் தான் 1947. இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்திருக்கிறார். எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே படங்களை தயாரித்த அவர் சில ஆண்டுகள் எந்த படத்தையும் தயாரிக்காமல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 1947 திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1947 படக்குழுவினருடன் செம்ம அலப்பறை செய்த இர்பான்.! அயோ சிரிச்சு முடியல, செம்ம காமெடியான வீடியோ 1

ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த பொன் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. சில நாட்கள் கழித்து இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கௌதம் கார்த்திக் ஜோடியாக அறிமுக கதாநாயகி ஒருவர் நடித்திருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி மூலமாக பிரபலமான புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதை குறித்து பேசிய புகழ் ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுத்துவிட்டு சென்றபோது பல கிராமங்களுக்கு விடுதலை கிடைத்தது தெரியாமலே இருந்து வந்தது. அப்போது அவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்பது குறித்த ஒரு கற்பனை கதையாக இந்த படம் அமைந்திருப்பதாக கூறினார். இந்த நிலையில் தற்போது இந்த குழுவினருடன் இர்ஃபான் ஒரு புதிய பேட்டி ஒன்றை எடுத்து இருக்கிறார்.

அதில் புகழ், கௌதம் கார்த்திக் மற்றும் படத்தில் நடித்த தாத்தா ஒருவருடன் இணைந்து இந்த படம் பற்றிய சுவாரசியமான தகவல்களை பேட்டியாக எடுத்து இருக்கிறார் இர்பான். படத்தில் புகழ் காமெடி மட்டும் செய்யாமல் எமோஷனலாக பல காட்சிகளின் நடித்திருப்பதாகவும் தனது திரைப்பயணமே இந்த படத்திற்கு பின்னர் மாறப்போவதாகவும் புகழ் நெகழ்ச்சியுடன் கூறினார். மேலும் அங்கு சமைக்கப்படும் உணவுகளை அவர் ருசி பார்த்தும் இந்த வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார். மிகவும் காமெடியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் பேட்டியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Irfan Views

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்