Categories: சினிமா

கூல் சுரேஷுக்கு ஐபோன் பரிசளித்த ஐசரி கணேஷ்.! சுரேஷுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஐசரி

வெளியிட்டது

தான் போகின்ற இடங்களில் எல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தை ஃப்ரீயாக ப்ரமோஷன் செய்த கூல் சுரேஷ்க்கு ஐசரி கணேஷ் தற்போது ஐபோன் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அவர் செய்த இந்த free பிரமோஷனுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக ஐசரி கணேஷ் இந்த பரிசை வழங்கி இருக்கிறார். அதற்கு பரிகாரமாக ஐசரி கணேசன் புகைப்படத்தை தனது பூஜை அறையில் வைத்திருக்கிறார் கூல் சுரேஷ். டி ராஜேந்திரன் அவர்களின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், முதலில் டிஆர் இன் பேட்டிகளின் போது தான் வைரலாக ஆரம்பித்தார். பேட்டிகளின் நடுவே திடீரென்று அவர் வித்தியாசமாக நடந்து கொள்வார். அதைப் பார்த்த பலருக்கும் சிரிப்பு வந்தது. பின்னர் திரைப்படங்களுக்கு சென்று படங்களை பற்றிய விமர்சனங்களை கூறி வந்தார் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷுக்கு ஐபோன் பரிசளித்த ஐசரி கணேஷ்.! சுரேஷுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஐசரி 1

 

அவர் பேசும் பொழுதெல்லாம் நான் டிஆரின் வளர்ப்பு, சிம்புவின் உடன்பிறப்பு என்று பேசுவார். பின்னர் வெந்து தணிந்தது காடு, அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்று பேசுவார். வெந்து தணிந்தது காடு படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படம் வெளியாகும் பல நாட்களுக்கு முன்பிருந்தே கூல் சுரேஷ் இந்த படத்திற்கான பிரமோசனை தொடங்கியிருந்தார். அவர் வாயிலிருந்து எப்பொழுது பேசினாலும் வெந்து தணிந்தது காடு என்று மட்டுமே வந்து கொண்டிருந்தது.

படம் வெளியாகி வசூலை குவித்திருந்தது. எனவே படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவிற்கு டொயோட்டா வெல்ஃபயர் என்ற சொகுசு கார் ஒன்றை பரிசளித்து இருந்தார். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு royal enfield அதான் பைக்கையும் பரிசளித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடிகர் கூல் சுரேஷை சந்தித்த அவர், ஐபோன் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார். செல்லும் இடம் எங்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பல வருடங்களாக ப்ரமோஷன் செய்து வந்த கூல் சுரேஷுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் இதை பரிசளித்திருக்கிறார்.

மேலும் கூல் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஐசரி கணேஷ் ஏற்று கொளவதாக அறிவித்து இருப்பதால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் கூல் சுரேஷ். இதையடுத்து வீட்டின் பூஜையறையில் சாமி படங்களுடன் ஐசரி கணேசனின் புகைப்படத்தை கூல் சுரேஷ் வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Youtube Video Code Embed Credits: Ticket Box

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்