சமீபகாலகமாக ட்ரெண்டிங் நம்பர் 1ல் இருந்த பாடல் தான் புல்லட். இது தி வாரியர் என்ற படத்தில் வந்த பாடல் ஆகும். தி வாரியார் படமானது அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும், இந்த படத்தை என். லிங்குசாமி இயக்கியுள்ளார் மற்றும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்துள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தில் ராம் பொதினேனி ஹீரோவாகவும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும், கிருத்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளனர். இவர்களுடன் அக்ஷரா கவுடா மற்றும் நதியா ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் 14 ஜூலை 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், லிங்குசாமி தான் தெலுங்கில் அறிமுகமானதைக் குறிக்கும் வகையில், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிப் படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். படத்தில் நடிக்க முதலில் அல்லு அர்ஜுனை அணுகினார், ஆனால் அல்லு அர்ஜுனின் பிஸி ஷெட்யூல் காரணமாக படம் தாமதமானது. 18 பிப்ரவரி 2021 அன்று, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கும் நிலையில் ராம் பொதினேனி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எண்டுகண்டே… பிரேமாண்டா படத்தின் தமிழ்ப் பதிப்பான ஏன் என்றால் காதல் என்பேன்! படத்திற்குப் பிறகு பொதினேனி தமிழில் அறிமுகமான படம் இது.தோல்வியடைந்தது. ஜனவரி 2022 இல், படத்தின் தலைப்பு தி வாரியர் என அறிவிக்கப்பட்டது.

மார்ச் 2021 இல், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக அறிவிக்கப்பட்டது.ஜூலை 2021 இல், படத்தின் முக்கிய எதிரியாக ஆதி பினிசெட்டி நடிக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். ஆகஸ்ட் 2021 இல், அக்ஷரா கவுடா படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் 13 ஜூலை 2021 அன்று ஹைதராபாத் மற்றும் சென்னையில் தொடங்கியது. படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் அக்டோபர் 2021 இல் நிறைவடைந்தது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. புல்லட் பாடல் வெளியாகி பலரை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த நிலையில் ட்ரைலரும் மாஸாக உள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண..Watch the warrior movie trailer below
Youtube Video Code Embed Credits: Aditiya Music Tamil