“எல்லாம் சரி தான் இருந்தாலும்……”!! “பத்தல பத்தல” வீடியோ பாடல் வெளியீடு!!

நடிகர் கமல் 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு திரையில் தோன்றிய படம் விக்ரம். பழைய கமலின் விக்ரம் படத்தின் கேரக்டரை மட்டும் அப்படியே வைத்து தன்னுடைய கைதி படத்துடன் தொடர்பு படுத்தி, மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஜூன் 3ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அத்தனையையும் பூர்த்தி செய்து இப்பொது தமிழ் சினிமா ஒன்று எடுத்த அதிகபட்ச வசூலை கொண்டுள்ளது இந்த படம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எல்லாம் சரி தான் இருந்தாலும்......"!! "பத்தல பத்தல" வீடியோ பாடல் வெளியீடு!! 1

விளம்பரம்

கமல், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், நரேன் என படத்தில் வரும் அனைவருமே நடிப்பில் பட்டையை கிளப்ப, கடைசி 5 நிமிடங்கள் திரையில் வந்து ஒட்டுமொத்த திரையரங்கையும் அலற விட்டு போனார் சூர்யா. அடுத்த படம் லேட் , கைதியுடன் லிங்க் என அனைத்துமே கச்சிதம் படத்தில். படம் வெளியாகி 1 மாத காலம் நிறைவடையும் நேரத்தில் படம் இது வரை உலகளவில் 410 கோடியை வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.

தொடர்புடையவை  "வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்"

"எல்லாம் சரி தான் இருந்தாலும்......"!! "பத்தல பத்தல" வீடியோ பாடல் வெளியீடு!! 3

விளம்பரம்

படத்தின் முதல் அட்ட்ரக்ஷன் கமல். நீண்ட நாட்கள் பிறகு கமர்சியல் படங்களை தவிர்த்து வந்த அவர் இறங்கியடித்துள்ள படம் இது. அனிருத் இசையில் கமல் எழுத்து பாடிய “பத்தல பத்தல” பாடல் தான் முதலில் வெளியானது. மிக பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது படத்திற்கு. இந்த பாடலில் சில வரிகள் இடம் பெருகின்றன. “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே” என்ற வரிகள் சென்சார் போர்டு தடை செய்ய படத்திலிருந்து பாடல் காட்சி குறைக்கப்பட்டிருந்தது.

"எல்லாம் சரி தான் இருந்தாலும்......"!! "பத்தல பத்தல" வீடியோ பாடல் வெளியீடு!! 5

விளம்பரம்

இன்று  முழு பாடலும் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் யூடுபிலும் அந்த மொத்த வரிகளும் நீக்கப்பட்டு மற்றவையே வெளியாகின. இது கொஞ்சம் ஏமாற்றம் அளித்தாலும், பாடல் காட்சியில் நடிகர் கமலின் நடனம் பார்க்கவே செம்மையாக உள்ளது. நீங்களும் அந்த வீடியோ காட்சியை பார்க்க…..

விளம்பரம்

Video Courtesy – SonyMusicSouth

விளம்பரம்

Leave a Comment