“சந்திரபாபுவை எதிர்த்து போட்டி”!! “அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்”!!

நடிகர் சங்க செயலாளர், நாயகன் , தயாரிப்பாளர் என பல்வேறு வேலைகளில் நடிகர் விஷால் அடுத்தடுத்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்பு தான் திருமணம் என்று இவர் அறிவித்து பல்வேறு இன்னல்களில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சங்கம் கட்டிடம் எப்போது முடிக்கப்படும், இவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியவில்லை. சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம். video given below.

"சந்திரபாபுவை எதிர்த்து போட்டி"!! "அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்"!! 1

விளம்பரம்

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தொடர்புடையவை  அவர் மாதிரிலாம் ஆட முடியாது!!இது என்னோட அரபிக் குத்து!!!கலக்கும் டி.ஜே.பிராவோ!!!

"சந்திரபாபுவை எதிர்த்து போட்டி"!! "அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்"!! 3

விளம்பரம்

தமிழ் ஆரம்பக்கட்டங்களில் விஷால் நடிப்பில் வெளியான “சண்டக்கோழி. திமிரு, தாமிரபரணி” போன்ற படங்கள் வரிசையாக வெற்றிகளை குவித்தன. தமிழை தாண்டி இவை தெலுங்கிலும் மிக பெரிய வெற்றி பெற படங்களாகும். அதன் முழ தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டை இன்றளவும் வைத்துள்ளார் விஷால். அவ்வப்போது தமிழக அரசியலை தலைகாட்டி வந்த விஷால் இப்பொது தெலுங்கு அரசியலில் நுழைகிறார்.

"சந்திரபாபுவை எதிர்த்து போட்டி"!! "அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்"!! 5

விளம்பரம்

சமீபத்தில் பரவிய தகவல்கள் தான். ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் சரி, இப்போதுள்ள ஆந்திர மாநிலத்திலும் சரி,  இருதுருவங்களாக இருப்பவர்கள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும். குப்பம் தொகுதி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. இங்கு அவரை தோற்கடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

"சந்திரபாபுவை எதிர்த்து போட்டி"!! "அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்"!! 7

விளம்பரம்

தமிழகத்தின் எல்லைப் பகுதியான குப்பம் தொகுதியில் தமிழர்கள் நிறைய வசிப்பதால், அவர்கள் வாக்குகளை குறிவைக்கும் விதமாக, தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான விஷாலை ஜெகன் தேர்வு செய்ததாகவும் அந்த செய்திகளில் சொல்லப்பட்டது. நேற்றிலிருந்தே இந்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. ஆந்திர ஊடகங்களும் இது குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தன.

தொடர்புடையவை  கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்..! படத்தை வெளியிட தடை விதிப்பு..!

"சந்திரபாபுவை எதிர்த்து போட்டி"!! "அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஷால்"!! 9

விளம்பரம்

இதெற்கெல்லாம் முற்று புள்ளி வைக்க நடிகர் விஷால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர அரசியலில் நான் இறங்கப்போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிட போவதாகவும் சில வதந்திகள் பரவுவதை கேள்விப்பட்டேன். முற்றிலுமாக இந்த தகவலை மறுக்குகிறேன். இந்த வதந்தி தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு சினிமா தான் அனைத்தும். ஆந்திர அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றோ எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

Video Courtesy – Top Telugu Tv

விளம்பரம்

Leave a Comment