வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றையும், சிம்புவுக்கு டொயோட்டா உயர் ரக கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு இணைந்து நடித்திருந்த படம் தான் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற வெற்றி படங்களையடுத்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்திருந்தனர். இந்தப் படம் எழுத்தாளழ் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்த படத்தில் சித்தி இத்னானி, ராதிகா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்றிருந்தது. முதல் நாளிலேயே ரூபாய் 10.86 கோடி வசூலை பெற்றிருந்ததாக வர்த்தகர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக மறக்குமா நெஞ்சமும், மல்லிப்பூ பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் மல்லிகைப்பூ பாடலை பலரும் ஸ்டேட்டஸாக வைத்து ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்ததாக படத்தின் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார். இதையடுத்து தற்போது படத்தின் இயக்குனருக்கும் சிம்புவிற்கும் அவர் புல்லட் ரக பைக் மற்றும் கார் ஒன்றை பரிசாக அளித்து இருக்கிறார்.
சிம்புவுக்கு அளித்துள்ள டொயோட்டோ வெல்ஃபையர் காரின் மதிப்பு 92 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட் ரக பைக் ஒன்றையும் அவர் பரிசளித்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை பின்னால் அமர வைத்து ஒரு ரவுண்டு சுற்றி வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக இருக்கிறது.