பழம்பெரும் நடிகை லக்ஷ்மியின் மகளாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 100ற்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இருப்பினும் மக்களுக்கு இவரை “அபியும் நானும்” படத்தில் த்ரிஷாவிற்கு அம்மாவாகவும் இல்லையேல் “ஆறு” படத்தில் சவுண்ட் சரோஜாவாகவே நினைவிருக்கிறது.

90களில் நிறைய படங்களில் இவர் நாயகியாக நடித்துள்ள பல படங்கள் சிறிய பட்ஜெட் படங்களே ஆகும். நடிக்க வந்த சில நல்ல படங்களின் வாய்ப்பை இவர் கைநழுவ விட்டுள்ளார். அதில் மிகவும் குறிப்பிடவேண்டிய படம் மணிரத்னத்தின் “ரோஜா”
90களில் வெளியாகி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பேசப்படும் படம் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர். ஏஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தமிழ் சினிமாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா அரவிந்த் சாமி, மதுபாலா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது
இந்நிலையில் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறியதை நினைத்துஇப்பவும் ஒரு நடிகை கவலையில் இருக்கிறாராம். இப்பட கதை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை தான் மணிரத்னம் கேட்டாராம். ஆனால் அப்போது தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாது என ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ஒரு பேட்டியில், ரோஜாவில் நடிக்க தேதி இல்லை என தெலுங்கு படத்தில் நடித்தேன், ஆனால் அந்த படமும் டிராப் ஆனது. திரையில் ரோஜா படத்தை பார்த்த போது தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.