திரையில் நடிக்கும் நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இல்லை இயக்குநர்களோ ஒரு படம் மாபெரும் வெற்றி அடைந்தாள் அதே செண்டிமெண்டை கொண்டு அடுத்தடுத்து படங்கள் எடுப்பது வழக்கம். நடிகர்கள் பலரும் ஒரு படம் வெற்றி அடைந்தது என்றால் அதே போன்ற தலைப்பில் நடிப்பார்கள். சிலர் அதே முதல் எழுத்தை கொண்டு நடிப்பார்கள். நடிகர் திலகம் சிவகணேஷனுக்கு “ப”, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு “க”, இப்பொது கூட நம்ப தல அஜித்திற்கு “வ” என சில செண்டிமெண்ட் உள்ளது.

இன்று வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு காமலிற்கும் கூட இப்படி ஒரு செண்டிமெண்ட் உள்ளது. அதாவது கமல் அவர்கள் நடிப்பில் இந்த “வ” செண்டிமெண்ட் அவருக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. இன்று வெளியாகி உள்ள விக்ரம் படமும் சிறந்த வரவேற்பை பெற்று வருவதால் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் நடிப்பில் “வ” எழுத்தை முதலாக கொண்டு வெளியான 8 படங்களும் வெற்றியே.
வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், விக்ரம், வெற்றிவிழா, வசூல்ராஜா, விருமாண்டி:, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், இன்று வெளியாகியுள்ள அனைத்தும் “வ” வரிசையிலேயே இடம் பெறுகின்றனர். அனைத்தும் கமலின் திரைப்பயணத்தில் மிக பெரிய வெற்றி படங்கள்.

ஆரம்பம் முதலே நான் கமலின் தீவிரமான ரசிகன் என கோரிக்கொண்டிருந்த லோகேஷ், ஒரு விருது விழாவில் சிறந்த இயக்குனர் விருதை “கைதி” படத்திற்காக வாங்கியபோது, “நான் பெரிதாக படங்கள் பற்றியெல்லாம் படிக்கவில்லை, இவருடைய படங்களை பார்த்தே அனைத்தயும் கற்று உண்டேன் என கூறிருந்தார்.
அப்போது பலரும் லோகேஷ் கொஞ்சம் ஓவராக பேசுவதாக விமர்சித்தனர். ஆனால் இன்று படம் வெளியான நிலையில் நான் சும்மா கூறவில்லை, உண்மையில் அவருடைய வெறித்தனமான ரசிகன் என்பதை அனைவருக்கும் உரக்கதெரிவித்துள்ளார்.

அடுத்த பாகத்திற்கான லீட்டை வைத்து முடித்துள்ள லோகேஷ், விஜயின் படத்தை முடித்த கையேடு மீண்டும் விக்ரம் 3 படத்தை இயக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கும் ஏற்கனவே இவர் சிறப்பான மாஸ்டர் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.