பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான முதல் படம் “அட்டகத்தி”. இதில் நடிகர்கள் தினேஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா.இரஞ்சித் என பலரும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இவருடைய வாழ்க்கையை தொடங்கிய இவர், இப்பொது வெற்றிகரமான நடிகையாக வளம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.
இவருடைய திரை வாழ்க்கையில் முக்கிய படம் “காக்க முட்டை”. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இவர் 22 வயதிலேயே இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து தர்மதுரை, ரம்மி, வடசென்னை, நம்ம வீடு பிள்ளை, வானம் கொட்டட்டும் என அனைத்து படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கே தேர்ந்து எடுத்தே நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் நாயகர்களுக்கு தங்கையாகவோ, அக்காவாகவோ நடிக்க தயங்குவார்கள். ஆனால் அந்த பிம்பத்தை உடைத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “நம்ம வீடு பிள்ளை” மற்றும் விக்ரம் பிரபுவுடன் “வானம் கொட்டட்டும்” என இரண்டு படங்களில் தங்கையாக நடித்துள்ளார்.
இதனால் இவர்க்கு வாய்ப்பு குறைந்து விடும் என பாலரும் கூறி வந்த நிலையில் இவர் அடுத்தடுத்து படங்களில் நாயகி ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் “நீங்கள் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்து வருகிறீர்கள், அதே போல வாய்ப்பு விஜய் படத்தில் அமைந்தால் நடிப்பீர்களா?”, என கேட்டதற்கு, “என வாழ்க்கைல எப்பவும் அப்படி ஒரு ரோல் விஜய் சார் கூட பண்ணவே மாட்டேன், அடிச்ச அவருக்கு ஜோடியா தான் நடிப்பேன்” என பதில் கூறியுள்ளார்.
இந்த பேட்டி முன்னரே வேலையகிருந்தாலும், இப்பொது மீண்டும், ஐஸ்வர்யாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த விடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Videom Courtesy – jaya plus