Categories: BiggBoss 8

புலம்புறதுல என்ன அடிச்சிக்க ஆளே கிடையாது..! புலம்பி தள்ளும் ஜாக்லின்..! கடுப்பாகி கேட்கும் ஆர்ஜே ஆனந்தி..!

வெளியிட்டது

மக்களிடையே மிகவும் பெயர் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ்ல மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு எல்லா மொழிகள்லயும் நடத்தப்பட்டு வருது. இந்த நிகழ்ச்சிக்குன்னு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கு. தமிழ்ல இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் வெற்றிகரமா 7 சீசன்களை கடந்து இருக்கு. இப்போ 8வது சீசன் ஆரம்பமாகி இருக்கு. இந்தமுறை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

புலம்புறதுல என்ன அடிச்சிக்க ஆளே கிடையாது..! புலம்பி தள்ளும் ஜாக்லின்..! கடுப்பாகி கேட்கும் ஆர்ஜே ஆனந்தி..! 1

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

இந்த சீசன்ல முதலாவதாக இப்போ சாச்சனா வெளியே போயிருக்காங்க. 12 மணி நேரத்துல முதல் எலிமினேஷன் நடந்துருக்கு , இதுல எல்லாரும் சாச்சனாவை நாமினேட் பண்ணி வெளியே அனுப்பிருக்காங்க. சாச்சனாவை நாமினேட் பண்ணுன ஜாக்லின், தனக்கு பயங்கர குற்ற உணர்ச்சியா இருக்கு , ஆனா எனக்கு வேறே வழி தெரியல அவங்கள நாமினேட் பண்ணுனாதான் நான் இருக்க முடியும் பண்ணுனேனு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காங்க.

வெளியிட்டது

புதிய செய்திகள்