Categories: சினிமா

சூப்பர் ஸ்டாரும் குட்டி பையனும் சேர்ந்து பண்ற அலப்பறைய பாருங்க.! ஜெயிலர் படத்தின் அடுத்த ப்ரோமோ.!

வெளியிட்டது

ஜெயிலர் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வரும் நிலையில், தற்போது இன்றைக்கு இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்டு படக் குழுவினர் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், ஜாக் ஷெரிஃப், யோகி பாபு வசந்த் ரவி போன்ற பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். தற்போது இந்த படத்தில் இருந்து இரண்டு ப்ரோமோக்களை படக்குழுவினர் வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கின்றனர். திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திலிருந்து ஏற்கனவே ட்ரைலர் டீசர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரும் குட்டி பையனும் சேர்ந்து பண்ற அலப்பறைய பாருங்க.! ஜெயிலர் படத்தின் அடுத்த ப்ரோமோ.! 1

இந்த இரண்டு ப்ரோமோக்களை பார்க்கும் பொழுது இந்த படம் ஒரு தரமான ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக இருக்கும் அதே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ஒரு பாசமான அப்பாவாகவும், பேரனுக்கு அன்பான தாத்தாவாகவும் நடித்திருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. முதல் ப்ரோமோவில் தனது பேரனை அழைத்துக் கொண்டு காய்கறி வாங்க செல்கிறார் சூப்பர் ஸ்டார். அப்போது அங்கு போனை எடுத்துக் கொண்டு யூடியூபர்ஸ் செய்வது போல விளாக் செய்கிறார் அந்த சிறுவன். இவர்தான் முத்து, இவர் எனக்கு பிடித்த கேரட்டை விட்டுவிட்டு மற்ற காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் வாங்கும் எதையும் நான் சாப்பிட போவதில்லை என்று சொல்லிவிட்டு செல்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோவாக மீண்டும் பேரனுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரோமோவில் மீண்டும் யூடியூபராக இருக்கும் பேரனுக்கு கேமரா மேனாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அதில் அந்த சிறுவன் நாங்கள் இரண்டு மாதமாக தண்ணீர் ஊற்றி வளர்த்த கேரட்டை பாருங்கள் என்று சொல்கிறார். அதற்கு சூப்பர் ஸ்டார் இதை பார்த்தால் கடையில் இருந்து பிரஷ்ஷாக வாங்கிக் கொண்டு வந்தது போல இருக்கிறது என்று சொல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது கண்டிப்பாக தாத்தா பேரன் காம்பினேஷனில் மிகப்பெரிய படமாக வந்திருக்கும் என்று தெரிவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்