7 நாளில் வரலாற்று சாதனை செய்த ஜெயிலர்.! தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை.!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றி நடை போட்டு வரும் ஜெயிலர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களான விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மொத்த வசூலை ஏழே நாட்களில் அடித்து துவைத்து காலி செய்து இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இதனால் தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களுக்கு அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயக், மோகன்லால், சிவராஜ்குமார் என்று மிகப் பெரிய நடிகர்களுடன் ஜெயிலர் படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த படம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், பின்னர் குடும்பம் குடும்பமாக சென்று இந்த படத்தை பலரும் பார்த்தனர்.

7 நாளில் வரலாற்று சாதனை செய்த ஜெயிலர்.! தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை.! 1

இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான காவலா பாடல்கள் வெளியான போது பலருக்கும் இது ஃபேவரைட்டாக மாறி இருந்தது. பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தனர். தொடர்ந்து வெளியான பாடல்களும் கிலிம்ப்ஸ் வீடியோக்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் சுமார் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

படம் வெளியான ஏழு நாட்களில் சுமார் 375 40 கோடி வசூலை பெற்றுள்ளது. இது தமிழ் திரையுலகில் ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த படமும் வெளியாகி ஏழு நாட்களில் இவ்வளவு கோடியை வசூலித்தது கிடையாது. விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களின் மொத்த வசூலே 500 கோடியை நெருங்கி இருக்கும் நிலையில், 7 நாட்களில் மட்டும் சுமார் 375 கோடியை பெற்று தான் ஒரு நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை ரஜினி நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Twitter Original Source From: Sun Pictures

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்