சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகமெங்கிலும் 3500 திரையரங்குகள் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக போகவில்லை. எனவே நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டு தனது அடுத்த கதையை கவனமாக தேர்வு செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் இந்த படத்தை இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகிவிட்டது. பின்னர் நெல்சனை பார்த்து ரஜினி ரசிகர்கள் பலரும் பயந்து போயிருந்தனர். இந்த பயத்தை நெல்சன் போக்கினாரா? சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் படத்தை தரமாக இயக்கி இருக்கிறாரா.? என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் ஆகியோருடன் அரக்கோணத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகள் வசந்த் ரவியும் காவல்துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் விநாயக்கின் கும்பல் சிலை கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறது. சிலைகள் அடங்கிய கண்டெய்னர் லாரியை போலீஸ் அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி பறிமுதல் செய்கிறார். இந்த பிரச்சனையில் வசந்த் ரவி காணாமல் போகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டதாக ரஜினிக்கு தகவல் கிடைக்கிறது. தன் மகனை நேர்மையாக வளர்த்ததால் தான் இப்படி இறந்து விட்டதாக ரஜினிக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் அந்த கும்பலை பழிவாங்க புறப்படுகிறார் ரஜினிகாந்த். பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தில் மீதிக் கதை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினி தனது ஸ்டைலில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்பா அல்லது குடும்ப உறுப்பினர்களை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்குவது என்பது இந்திய சினிமாவில் சலித்து போன ஒரு கதை. சில சமயம் மகனை கொன்ற வில்லனை அப்பா பழிவாங்குவது போல கதை நகர்ந்திருக்கும். விக்ரம் படம் கூட அது போல ஒரு கதை தான். தற்போது ஜெயிலர் படத்திலும் அதே போல கதை அமர்ந்திருந்தாலும் ரஜினியின் ஸ்டைலும், ராக் ஸ்டார் அனிருத்தின் மியூசிக்கும் இணைந்து படம் மிரட்டி இருக்கிறது. காட்சிக்கு காட்சி கைத்தட்டல்களும் விசிலும் பறக்கிறது. யோகி பாபு ரஜினி இடையான காமெடி காட்சிகள் வேறு லெவலில் வந்திருக்கிறது. விஜய் கார்த்தி கண்ணனின் ஒளிப்பதிவும், நிர்மலின் எடிட்டிங் முன் கதைக்கு தேவையான அளவு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
பொண்டாட்டி கிட்ட பொய் சொல்லியே நரகத்துக்கு போயிடுவோம், படிச்சாலும் ரிட்டயர்டு ஆனாலும் வீட்ல மதிப்பு இல்ல, சொன்னதுக்கு மேலேயும், கீழேயும் இருக்காது, சொன்னபடி இருக்கும். நான்தான் இங்கே கிங் போன்ற வசனங்களும், காவலா தலைவரு அலப்பறை போன்ற பாடல்களும் ரசிகர்களை எழுந்து குத்தாட்டம் போட வைக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் ஜெயிலர் திரைப்படம் திருவிழா போல தியேட்டர் முழுவதும் கொண்டாட்டத்தில் இருக்கிறது. குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கும் அளவிற்கு படம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆங்காங்கே ஏற்படும் சலிப்புகளும், இரண்டாம் பாதியில் நீளமும் குறைக்கப்பட்டு இருந்தால் படம் என்றும் அலப்பறையை கூட்டி இருக்கும். மொத்தத்தில் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.!
இந்த படத்திற்கு TamilGlitz வழங்கும் ரேட்டிங் – (4.0/5)