Categories: சினிமா

ஜெயிலர் படம் எப்படி இருக்கு.? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.!

வெளியிட்டது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தனது 169 படமாக ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயக் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழக மட்டுமல்லாமல் பெங்களூரிலும் அதிக அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படம் எப்படி இருக்கு.? பொதுமக்கள் கூறிய விமர்சனம் இதோ.! 1

இந்தப் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சையும் கூடவே எழுந்திருந்தது. ஆடியோ லாஞ்சில் பேசியிருந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதன் பின்னர் மோதல் நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே சென்றது. ரஜினி ரசிகர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் சண்டை நாளுக்கு நாள் பெரிதாக தொடங்கியிருந்தது. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். ஆனால் இது குறித்து ரஜினியும், விஜயும் எந்தவிதமான கருத்தையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் படம் இன்றைக்கு தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் நெல்சன் கம் பேக் கொடுத்திருப்பதாகவும், படம் நன்றாக இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பழைய ரஜினிகாந்தை பார்த்தது போல் இருந்ததாகவும், தலைவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் வேறு யாரும் அவரிடத்தில் நெருங்க முடியாது என்று மறைமுகமாக விஜயை தாக்கியும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Shruthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்