Categories: சினிமா

ஜெயிலர் படத்தின் அடுத்த சிங்கிள்.! சூப்பர் மெலடியாக “ரத்தமாரே” வெளியானது.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலாக ரத்தமாரே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரைலரை பார்த்த பின் தலைவர் நல்ல அப்பாவாக, தாத்தாவாக, குடும்பத் தலைவராக நடித்து அசத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் இணையத்தில் வேகமாக அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தின் அடுத்த சிங்கிள்.! சூப்பர் மெலடியாக "ரத்தமாரே" வெளியானது.! இதோ வீடியோ.! 1

இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, மோகன்லால், ஜாக்கி ஷரப், சிவராஜ் குமார், சுனில் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் சிறை கைதிகளுக்கு ஜெயிலராக சூப்பர் ஸ்டார் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் படத்தில் இருந்து காவாலா, ஹுகும் டைகர், ஜுஜுபி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ட்ரைலர் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலாக ரத்தமாரே என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதில் குடும்ப தலைவனாக, அப்பாவாக, பேரனுக்கு நல்ல தாத்தாவாக சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். குடும்பம், பாசம், ஆக்ஷன், fight என அனைத்தும் கலந்த படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த பாடலைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்