நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை தற்போது புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்திருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் ட்ரைலர் பற்றிய அறிவிப்பை அறிவித்து படக்குழு தற்போது சர்ப்ரைஸ் செய்திருக்கிறது. வருகிற 10-ஆம் தேதி ஜெயிலர் படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இன்னும் 9 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் தற்போது ட்ரைலர் வெளியேற்ற தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பலரும் டிரைலருக்காக ஏங்கி காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகின் ஜாம்பவானாக விளங்கிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சுமார் 168 படங்களில் நடித்து முடித்த அவர் தனது 169-வது படமாக ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இருந்து காவலா, ஹுகும் டைகர் மற்றும் ஜுஜுபி ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிருத் மேற்கொண்டு இருந்தார். வெளியான மூன்று பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருப்பதால் இசை வெளியீட்டு விழாவையே மிகப் பிரமாண்டமாக நடத்தி முடித்திருந்தனர். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் காக்கை பருந்து ஆகிய குட்டி கதைகளை சொல்லி இருந்தார். இது மறைமுகமாக விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதை குறிப்பதாக ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து எதிர்பாராத விதமாக வெளிப்படையாக பேசி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது படம் வெளியாக இன்னும் 9 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற ரசிகர்கள் ஏங்கி காத்துக் கிடந்தனர். அதை போக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
கையில் துப்பாக்கியுடன் யாரையோ சுடுவது போன்ற போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம், காத்திருப்பு முடிந்தது, இது வருகைக்கான நேரம் ஜெயிலர் ட்ரைலர் நாளை வெளியாகிறது” என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இது தற்போது ரஜினி ரசிகர்களையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் ட்ரைலருக்காக ஏங்கி காத்திருக்கும் நிலையில் ட்ரைலர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை.!