Categories: சமூகம்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் ஜாமியா மஸ்ஜித் இன்று திறப்பு!!

வெளியிட்டது
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் ஜாமியா மஸ்ஜித் இன்று திறப்பு!! 1

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்திருந்தது. இதற்கு பின்னர் அங்கு பல கட்டுபாடுகள் விதித்து. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதியும் மூடினர்.

இதன் பிறகு, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், ஜாமியா மசூதி நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நடைபெற்ற பிரார்த்தனையின்போது, மத குரு முப்தி குலாம் ரசூல் தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது.

இதில் சுமார் 70 பேர் கலந்து கொண்டு தொழுகையை தொடர்ந்தனர். மொத்தம் இந்த மசூதியில் சுமார் 30 ஆயிரம்பேர் தொழுகை நடத்த முடியும். 13-ம் நூற்றாண்டைசேர்ந்த இந்த மசூதி இந்தியாவின் மிக நீளமான மசூதி என்ற புகழைப் பெற்றது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்