ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கான பாதுகாப்பு சட்டப்பிரிவான 370ஐ நீக்கிய பின்னர் நடந்த முதல் தேர்தலாகும். இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக தோலிவியடைந்து இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் 98 சதவிகித விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அணையம் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
முக்கிய எதிர் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தன. இதனால் பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது.
சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டது தனது அரசின் மிக பெரிய சாதனை என்று பாஜக சொல்லி வரும் நிலையில்; ஜம்மூ, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் சுமார் 307 பஞ்சாயத்து தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றதில் 217 இடங்களை சுயட்சைகள் வென்றுள்ளனர்.
தங்களது மத்திய அரசின் ஆட்சியில், ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஒரு மாதகாலமாக பாஜக பிரசாரம் செய்து வந்த போதிலும் வெறும் 81 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் 19ல் சுயேட்சைகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. பாஜகவோ இரண்டு மாவட்டங்களில் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
| மாநில பிரதேசங்கள் | பாஜக | சுயேட்ச்சை |
| ஜம்மூ (148 இடங்கள்) | 52 | 88 |
| காஷ்மீர் (128 இடங்கள்) | 18 | 109 |
| லடாக் (31 இடங்கள்) | 11 | 20 |
இவர்களை தவிர, ஜம்மூ பிரதேசத்தில் மட்டும் போட்டியிட்ட பாந்தர்ஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குப்வாரா, பாண்டிபோரா, காண்டர்பால், ஸ்ரீநகர் மற்றும் குல்கம் ஆகிய ஐந்து காஷ்மீர்பிரதேச மாவட்டங்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை உணர்த்துகிறது. இதே போல் பாரமுல்லா மாவட்டத்தில் பாஜக ஒரு இடத்திலும், அனந்த்நாக் மாவட்டத்தில் 3 இடங்களிலும் பாஜக வென்றுள்ளது.
இதனை தவிர இந்து மக்கள் அதிமாக வசிக்கும் ஜம்மூ பிரதேசத்தில் கூட பாஜகவால் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இங்கு சுயேட்சைகள் 88 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தின் அனைத்து இடங்களையும் சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளனர்.
திபெத்திய பௌத்தர்களும், ஷியா முஸ்லீம்களையும் அதிகமாக கொண்டுள்ள லடாக் பிரதேசத்தில் உள்ள 31 இடங்களில் 20ல் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். லே மாவட்டத்தில் பௌத்த மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இங்கு பாஜக 7 இடங்களிலும், சுயேட்சைகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் கார்கில் மாவட்டத்தில் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்க அதிகமாக இருக்கிறது. இங்கு பாஜக 4 இடத்திலும், சுயேட்சைகள் 11 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலின் முடிவுகள் சமீபத்திய பாஜகவின் அரசியலுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுகிறோம் என்ற அறைகூவல்களும் மக்கள் மத்தியில் எந்த ஒரு மாயையையும் உருவாக்கவில்லை என்பது புலப்படுகிறது.