முரண்பாடுகளை சந்திக்கும் கொலீஜியம்!

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒடிசா மாநில உயர்நீதி மன்ற கொலீஜியம் அமைப்பின் பரிந்துரைகளை உச்சநீதி மன்ற கொலீஜியம் அமைப்பு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

முரண்பாடுகளை சந்திக்கும் கொலீஜியம்! 1

ஒடிசா மாநில உயர்நிதி மன்ற பார் சங்கம் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் நீதிமன்ற அலுவல்களை புறக்கணிப்பு செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மாநில பார் சங்கம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விளம்பரம்

கொலீஜியம் அமைப்பு என்பது கடந்த 1993ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டது. தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் உள்ளடங்கிய கொலீஜியம் குழு மாநில உயர்நீதி மன்றங்களுக்கு நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனை அரசும் நடைமுறைப்படுத்தும்.

கடந்த அக்டோபர் 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் ஒடிசா கொலீஜியம் அமைப்பு பரிந்துரைகளில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே உச்சநீதி மன்ற கொலீஜியம் அமைப்பு ஏற்றக்கொண்டு உள்ளது. இது மற்ற மாநில கொலீஜியம் அமைப்புகளோடு ஒப்பிடும் போது, இது மோசமான விகிதாசாரமாகும். இதில் ஒடிசாவிக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் கொலீஜியம் அமைப்பு இருக்கிறது.

தொடர்புடையவை  விலைமதிக்க முடியாத வாழ்நாளை இழக்கிறார்கள் மக்கள்! அவர்களை சாகச் சொல்கிறீர்களா? அதிகாரிகளை சராமரி கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்!!

ஒடிசா உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆகும். ஆனால் 13 நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் மொத்தம் 5 பேர். ஆனால் இவர்களுக்கு பதில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

இதற்காக ஒடிசா கொலீஜியம் 24 பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால் இவர்களுள் மூவரை மட்டுமே உச்சநீதி மன்றம் எடுத்துள்ளது. ஒடிஸாவை போலவே, ராஜஸ்தானில் நீதிபதிகளின் எண்ணிக்கை 50. ஆனால் 21 நீதிபதிகளை கொண்டே இது இயங்கி வருகிறது. 20 பெயர்கள் பரிந்துரைக்கப்படும் நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த விகிதாசத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உத்தரபிரதேசம், கேரளா, சென்னை, பம்பாய் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கொலீஜியம் அமைப்பின் பரிந்துரைகள் 70%கும் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

உயர்நீதி மன்றங்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதாசாரம்:

அலகாபாத் 82%
மும்பை 72%
கொல்கத்தா 68%
டெல்லி 69%
குஜராத் 62%
கர்நாடகா 70%
கேரளா 80%
மத்திய பிரதேசம் 50%
சென்னை 76%
ஒடிசா 13%
பாட்னா 36%
பஞ்சாப் & ஹரியானா 60%
ராஜஸ்தான் 20%
தொடர்புடையவை  ஏன்டா முட்டாள்களா.. நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், சீமானும் ஒன்னா.? கொதித்து எழுந்த இயக்குனர் களஞ்சியம்.!

கடந்த இரண்டு ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட 140 நபர்களில் 14 நபர்களுக்கு மட்டுமே, அதற்கான காரணங்களை தெரிவித்திருக்கிறது உச்சநீதி மன்ற கொலீஜியம். ஆகையால் இதன் நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. எதன் அடிப்படையில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்? மற்றும் பரிந்துரைக்கப்படும் பெயர்களை நீக்குவதற்கு என்ன அலகுக்கோள்? அல்லது பரிந்துரைக்கப்பட்ட தரத்தினை இது பிரதிபலிக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுகிறது.

விளம்பரம்

பத்து பேரை போதிய வருமானம் இல்லை என புறக்கணித்திருக்கிறது, நான்கு பேரை வயது காரணம் காட்டி ஒதுக்கியுள்ளது, இதனை தவிர மீதமுள்ள 126 பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு காரணம் சொல்லப்படவில்லை.

முரண்பாடுகளை சந்திக்கும் கொலீஜியம்! 3

அக்டோபர் 1ஆம் தேதி கணக்கு படி, பல மாநில உயர்நீதி மன்றங்கள் 60 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நீதிபதிகளை கொண்டுள்ளது. மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு நீதிபதிகளின் அளவே 5 மற்றும் 11 தான். ஆகையால் இதனை தவிர்த்து பார்த்தோமேயானால், இந்தியாவின் மொத்த உயர் நீதிமன்றங்களின் சராசரி விகிதாசாரம் வெறும் 62 சதவிகிதமாக தான் இருக்கிறது.

விளம்பரம்

உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்றங்களின் கொலீஜியங்கள் காலியிடங்களை சரியான நேரத்தில் நிரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உயர்நீதிமன்றங்கள் முழு பலத்துடன் இயங்காத போது அதனை தெளிவுபடுத்த வேண்டும். அத்தகைய பொறுப்பினை அது கொண்டுள்ளது.

அதே போல், மாநில கொலீஜியங்களும் தங்களது பரிந்துரைகளை சரியான நேரத்தில் பரிந்துராய்க்க வேண்டும். ஆனால் சில நீதிமன்றங்கள் தவறி விடுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, ஆந்திரா நீதிமன்றத்தை சொல்லலாம். 38 சதவிகித நீதிபதிகளே உள்ள நிலையில் வெறும் 8 நபர்களை மட்டுமே அது பரிந்துரைத்து இருக்கிறது. அதேபோல், குஜராத் நீதிமன்றமும் 13 நபர்களை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. இதன் தற்போதைய இயங்கு தன்மை வெறும் 54 சதவிகிதம் தான்.

தொடர்புடையவை  ராஜீவ் காந்தி கொலை குறித்து தான் பேசிய பேச்சை திரும்பப் பெற முடியாது - சீமான்

இந்த நிலையில், மாநில கொலீஜிய அமைப்புகளால் தகுதியானவர் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்பட்டவர் என்ற நிலையில், அவர் ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளும் தகுதி ஒன்றியத்தின் மக்களுக்கு இருக்கிறது. சராசரியாக 64 சதவிகிதத்தை மட்டுமே கொண்டு இயங்கும் நீதிமன்றங்களின் 38 சதவிகித பரிந்துரைகளை அமல்படுத்தி 100 விகிதங்களுடன் ஏன் இயங்கவில்லை என்பதனை ஒன்றிய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய நேரம் இது…

விளம்பரம்

நன்றி: The Scroll
தமிழில்:
விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்

Leave a Comment