Categories: சினிமா

துருவ் விக்ரமுடன் தீவில் தனியா டேட்டிங் செய்யணும்.! முன்னணி நடிகையின் விபரீத ஆசை.!

வெளியிட்டது

நடிகர் துருவ் விக்ரம் உடன் ஒரு தனித்தீவில் தனியாக இருக்க வேண்டும் என்று ஜனனி ஐயர் பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆரியா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் அவன் இவன். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஜனனி ஐயர். பின்னர் இவர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான தெகிடி என்கிற படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பிரபலத்தைக் கொண்டு அவர் பிக பாஸ் சீசன் இரண்டில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் இந்த ஷோவில் மூன்றாவது ரன்னராக ஜனனி ஐயர் வந்தார். தமிழகத்தில் தன்னுடைய சாதி பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என்பதால் ஜனனி ஐயர் என்கிற தன்னுடைய பெயரிலிருந்து ஐயர் என்ற வார்த்தையை நீக்கியும் இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துருவ் விக்ரமுடன் தீவில் தனியா டேட்டிங் செய்யணும்.! முன்னணி நடிகையின் விபரீத ஆசை.! 1

 

தற்போது ஜனனி ஐயர் கைவசம் நான்கு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் எட்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் யாக்கை திரி, முன்னறிவான், தொல்லைக்காட்சி போன்ற நான்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் ஹோம் டூர் வீடியோ, அழகு குறிப்பு வீடியோக்கள் மற்றும் விளாக் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கேள்வி பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருக்கும் அவரிடம் ரசிகர்களின் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அது அனைத்திற்கும் அவர் பதில் அளித்திருக்கிறார்.


அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் தனித் தீவில் தனியாக ஒரு நபருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் யாருடன் இருப்பீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அப்போது பதில் அளித்த ஜனனி முதலில் தல தளபதி உடன் இருப்பேன். அவர்கள் இல்லை என்றால் விக்ரமின் மகனான துருவ் விக்ரமுடன் தனியாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவரின் மகான் படம் பார்த்து பின்பு நான் அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: actressjananiofficial

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்