மீண்டும் காமெடியில் பட்டையில் கிளப்பி இருக்கும் விமல்.! தெய்வ மச்சான் படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் விமல் நடிப்பில் இந்த மாதம் வெளியாக இருக்கும் தெய்வ மச்சான் படத்தின் டிரைலர் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது. மீண்டும் காமெடியில் அசத்தியிருக்கும் விமலுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் கபடி குழுவில் ஒரு ஆளாக இருந்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் விமல். பின்னர் பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. பல படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காமெடியில் பட்டையில் கிளப்பி இருக்கும் விமல்.! தெய்வ மச்சான் படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

இவர் கடைசியாக கன்னி ராசி என்கிற படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் பெரிய அளவிற்கு கை கொடுக்கவில்லை. தற்போது கைவசம் ஏழு படங்களில் நடித்து வருகிறார். சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சக்குடை, குல சாமி, லக்கி, துடிகரங்கள் மற்றும் தெய்வமச்சான் ஆகிய பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது குலசாமி மற்றும் தெய்வமச்சான் ஆகிய இரு படங்களும் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. விமலுடன் இணைந்து பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் ,பாலசரவணன், அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மார்ட்டின் நிர்மல் என்பவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டதாக இருக்கிறது. காமெடி பிரியர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  'சைரன்' படத்திலிருந்து வெளியான HD புகைப்படங்கள்..!

மீண்டும் காமெடியில் பட்டையில் கிளப்பி இருக்கும் விமல்.! தெய்வ மச்சான் படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

படத்தில் டிரைலரை பார்க்கும் பொழுது தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க விமல் நடத்தும் கூத்துகள் தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது. வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி விமலின் மற்றொரு திரைப்படமான குலசாமி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியிருக்கும் “தெய்வமச்சான்” படத்தின் டிரைலரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment