குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்து தற்போது தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது மூன்று சீசனை முடித்து தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றியாளர்களாக வந்தனர். தற்போது நான்காவது சீசன் மொத்தம் பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் இருக்கின்றனர். இயக்குனர் கிஷோர், மதுரை காளையன் விஜே விஷால், சிவாங்கி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், விசித்ரா, ஷெரின், ராஜ் அய்யப்பன், ஸ்ருஷ்டி, மைம் கோபி ஆகிய 10 குக்குளுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவதாக கிஷோரும், இரண்டாவதாக காளையனும், மூன்றாவதாக ராஜ் அய்யப்பனும் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் 7 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருந்தனர்.

மேலும் கோமாளிகாக இருந்த புகழ், மணிமேகலை, குரேஷி, சுனிதா ஆகியோர் மட்டுமே இந்த சீசனிலும் கோமாளிகளாக வந்துள்ளனர். இதில் மணிமேகலை ஒரு நாள் திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். புது கோமாளிகளாக ஜி.பி.முத்து, தங்கதுரை, மோனிஷா, ரவீனா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா போன்றவர்களை களம் இறக்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நார்த் இந்தியன் உணவுகளை சமைக்க வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சமையலுக்கு இடையில் கொடுக்கப்படும் தொல்லைகளுக்கு கையில் பலூடா சாப்பிடும் ஸ்பூனை மாட்டிக் கொண்டு சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ப்ரோமோக்கள் இந்த வாரம் முழுவதும் வெளியாகி இருந்தது. மேலும் கோமாளிகள் குக்குகள் போலவே வேடமடைந்து வந்தனர். அதில் புகழ் ஷெரின் போலவும், குரேசி ஸ்ருஷ்டி போலவும், மோனிஷா சிவாங்கி போலவும் வந்துள்ளனர்.

மேலும் ஜிபி முத்து, காளையன் போலவும் ரவீனா விசித்ரா போலவும் கெட்டப் அணிந்து வந்திருந்தனர். இதனால் இந்த வாரம் மிகுந்த அலப்பறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் எந்த குக் வெளியேற்றப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் விஜே விஷால் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் மைம் கோபி வெற்றிப் பெற்று இருந்தார். இந்த நிலையில் இந்த வாரம் ஆறு குக்குகள் மட்டுமே போட்டியில் இருந்தனர். ஷெரின், ஸ்ருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியன், ஷிவாங்கி என ஐந்து பெண் போட்டியாளர்களுடன் விஷால் மட்டும் ஒரே ஒரு ஆண் போட்டியாளராக சமைத்த நிலையில் அவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.