வானதியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் அருள் மொழி வர்மன்.! இரண்டாவது சிங்கிள் கிலிம்ப்ஸ் வீடியோ.!

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிலிருந்து நாளை இரண்டாவது சிங்கள் பாடலான வீர ராஜா வீரா வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அந்த பாட்டின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த பாடல். ராஜராஜ சோழனுக்கும் வானதிக்கும் இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு தோற்றுப் போயிருந்தனர். ஆனால் மணிரத்தினம் இந்த கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார் .இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வானதியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் அருள் மொழி வர்மன்.! இரண்டாவது சிங்கிள் கிலிம்ப்ஸ் வீடியோ.! 1
முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாகியிருந்தது. சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஏங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக வீர ராஜா வீரா என்கிற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து ட்ரெய்லர் மற்றும் அகநக என்கிற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு லட்சங்களில் உதவி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.!

வானதியுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் அருள் மொழி வர்மன்.! இரண்டாவது சிங்கிள் கிலிம்ப்ஸ் வீடியோ.! 3
பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக உள்ள நிலையில் இதற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது வானதிக்கும், ராஜராஜ சோழனுக்கும் இடையில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு ஒரு காதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த க்ளிம்ப்ஸ் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Tips Tamil

விளம்பரம்

Leave a Comment