பிரபல சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜாங்கிரி மதுமிதா..! இதோ ப்ரோமோ.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட சர்ச்சை போட்டியாளராக இருந்த ஜாங்கிரி மதுமிதா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். தற்போது இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிதா. அதன் பின்னர் இவர் பல படங்களில் துணை வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ் களுக்கு மிகப் பிடித்தமான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 3 போன்ற தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். லொள்ளு சபாவின் மூலமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தற்போது தமிழ் திரையுலகில் மிகப்பெரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அவர் அங்கு மற்ற போட்டியாளர்களால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கும் தூண்டப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பிரபல சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜாங்கிரி மதுமிதா..! இதோ ப்ரோமோ.! 1
இதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய மதுமிதா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார் பிக்பாஸில் நடந்தது குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் பேட்டிகளில் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா ஹீரோயினாக நடித்து வரும் இனியா சீரியலில் மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து பேசி அவர், “இனியா சீரியலில் போலீஸ் வேடத்தில் நடிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய இயக்குனர்கள் நாராயணமூர்த்தி சாய்மருது ஆகியோருக்கு நன்றி, மேலும் ஆலியா மானசா ரிஷியுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன், எனது சிறந்த நடிப்பை இந்த தொடரின் மூலமாக ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறேன்” என்று பேசியிருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான ஆலியா மானசா அங்கிருந்து விலகி சன் டிவியில் இனியா என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.


2022 டிசம்பர் முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்தத் தொடரில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடிகர் ரிஷி நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மானசி, தீபக்குமார், பிரவீனா, சந்தான பாரதி, உமா பத்மநாபன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரை நாராயணமூர்த்தி மற்றும் சாயம் அருகே ஆகிய இரண்டு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். படங்களில் பிசியாக நடித்து வரும் மதுமிதா தற்போது நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மதுமிதாவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Sun TV 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்