புற்றுநோயால் அனாதையாக இறந்த நடிகர்..! கூடவே இருந்து இறுதி சடங்கு செய்த இமான்.!

மறைந்த துணை நடிகர் ஒருவரின் உடலுக்கு இறுதிவரை உடன் இருந்து இறுதிச் சடங்குகள் செய்த இசையமைப்பாளர் இமானின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நல்ல மனதுடன் அவர் செய்த செயலுக்காக இமானுக்கு தற்போது பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்து பின்னர் கடைசி காலத்தில் கஷ்டப்படும் துணை நடிகர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் அனாதையாக இறந்த நடிகர்..! கூடவே இருந்து இறுதி சடங்கு செய்த இமான்.! 1

விளம்பரம்

சினிமாத் துறை என்பது பலருக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் அள்ளிக் கொடுக்கும் துறையாக இருக்கும் போதிலும் பலருக்கு அது எட்டாத கனியாகவே இருக்கிறது. அந்த வகையில் காணாமல் போன ஒருவர்தான் படிக்காதவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் பிரபு. தனுஷின் படிக்காதவன் படத்தில் அவரது தங்கையை பெண் பார்க்கும் வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் பிரபு. பல படங்களில் வாய்ப்பு நடித்திருந்த போதிலும் மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிறார்.

தொடர்புடையவை  ஒரு தடவையாவது என்ன வந்து பாத்துட்டு போடான்னு எங்க அப்பா சொன்னாரு..பேச முடியாமல் கதறி அழுத அபிஷேக் ராஜா

புற்றுநோயால் அனாதையாக இறந்த நடிகர்..! கூடவே இருந்து இறுதி சடங்கு செய்த இமான்.! 3

விளம்பரம்

இதனால் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது ஒரு கட்டத்தில் புற்று நோய்க்கு மருத்துவ செலவிற்கு கூட காசு இல்லாமல் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த நோய் குறித்து தெரியாமல் இருந்து வந்த அவர் பின்னாளில் மருத்துவமனைக்கு சென்று சோதித்து பார்த்தபோது நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர்ந்திருக்கிறார். கொரோனா சமயத்தில் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் போகவே, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

புற்றுநோயால் அனாதையாக இறந்த நடிகர்..! கூடவே இருந்து இறுதி சடங்கு செய்த இமான்.! 5

விளம்பரம்

பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனது நண்பர் ஒருவரை கண்ட அவர் தனது நிலை குறித்து கூறியதும் அவருக்கு அந்த நண்பர் உணவு மற்றும் தங்கும் இடத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பிரபுவின் நிலையை அறிந்த டி இமான் அவருக்கு தேவையான மருத்துவ செலவுகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நோயின் தாக்கம் முற்றிவிட்டதால் சிகிச்சை பலனின்றி பிரபு இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

புற்றுநோயால் அனாதையாக இறந்த நடிகர்..! கூடவே இருந்து இறுதி சடங்கு செய்த இமான்.! 7
ஆதரவின்றி இருந்த பிரபுவின் உடலை மயானம் வரை சென்று அவருக்கு இறுதி சடங்குகள் செய்து அவரது உடலை தகனம் செய்து இருக்கிறார் டி இமான். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரபுவின் புகைப்படத்தை பகிர்ந்த இமான், “பிரபு இன்று நம்மிடையே இல்லை, அவர் புற்றுநோய் நான்காம் நிலையில் இருந்தார், இன்று காலை அவர் மரணம் அடைந்தார். மருத்துவர்கள் செவிலியர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை இந்த நோயிலிருந்து மீட்டுக் கொண்டு வர தங்களது சிறப்பான பங்களிப்பை செய்திருந்தனர். ஆனாலும் அது முடியாமல் போனது. எனது இதயபூர்வமான வருத்தங்கள் சகோதரரே” என்று அவரின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டு இருக்கிறார். பலரும் டி இமானின் இந்த செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இறந்த பிரபுவின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  இது ஒரு அரசியல் நாடகம்.! விக்ரமனுக்கு ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு எதிராக பொங்கிய வனிதா.!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment