Categories: சினிமா

வசூலை அடித்து நொறுக்கிய ‘ஜவான்’.! ரூ.1000 கோடியை கடந்து சாதனை.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.!

வெளியிட்டது

இயக்குனர் அட்லீ ஹிந்தி திரைத்துறையில் முதல் படத்திலேயே ஆயிரம் கோடி வசூல் சாதனையைப் பெற்றுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஜவான்’ திரைப்படம். இந்த படம் ஆயிரம் கோடியை கடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். படத்தை தயாரித்த ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.505 கோடியையும் உலக அளவில் ரூ1004.92 கோடியையும் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக ஹிந்தி திரைத்துறையில் முதல் படத்திலேயே ஆயிரம் கோடி வசூல் சாதனையைப் பெற்ற இயக்குனராக அட்லீ மாறியுள்ளார்.

வசூலை அடித்து நொறுக்கிய 'ஜவான்'.! ரூ.1000 கோடியை கடந்து சாதனை.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு.! 1
ஹிந்தி திரைத்துறையில் முதல் முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குனர் அட்லீ. தமிழில் ராஜா ராணி, மெர்சல், பிகில், தெறி என நான்கு படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்தவர். ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ‘ஜவான்’ என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாக நயன்தாரா, அனிருத், யோகி பாபு போன்றோர் ஹிந்தி திரைத்துறையில் காலெடுத்து வைத்திருந்தனர். ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒரு கலக்கு கலக்கி இருந்தார். மேலும் பிரியாமணி, தீபிகா படுகோனே போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர். ஆரம்பத்திலிருந்து கோடிகளை வாரி சுருட்டி வந்த இந்த திரைப்படம் 18 நாள் முடிவில் ரூ.1004.92 கோடிகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே ரூ.129 கோடியை வசூலுக்கு மகத்தான சாதனையுடன் தொடங்கி இருந்த இந்த திரைப்படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். தினசரி வசூல் நிலவரத்தை படத்தை தயாரிக்க ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்த நிலையில், இன்று ஆயிரம் கோடியை கடந்து விட்டதையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். பலரும் அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Twitter Original Source From: Red Chillies Entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்