Categories: சினிமா

வெறித்தனமாக வசூல் செய்து வரும் ஜவான்..! 9வது நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!

வெளியிட்டது

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ஒன்பதாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த தகவலை தற்போது படத்தை தயாரித்த ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் அட்லீ முதல் முறையாக ஹிந்தி சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்கிற படத்தை இயக்கி இருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருந்த இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியான முதல் நாள் தொடங்கி வசூலில் மகத்தான சாதனை புரிந்து வருகிறது.

வெறித்தனமாக வசூல் செய்து வரும் ஜவான்..! 9வது நாள் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..! 1
இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி போன்ற பல தமிழ் நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘ஹையோடா’ என்கிற பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரின் ஃபேவரைட்டாக மாறி இருக்கிறது. இந்த பாடல் படம் வெளியாகி நாளுக்கு நாள் வசூலை குவித்து வருகிறது. 9 நாள் முடிவில் படம் ரூ.735.02 கோடி வசூலித்திருப்பதாக தற்போது படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் இந்த அறிவிப்பை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நாள் ஒன்று தொடங்கி தினசரி வசூல் நிலவரத்தை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி முதல் நாள் ரூ.129 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் ரூ.249 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் ரூ.384.69 கூட ரூபாயும் வசூலித்திருந்தது. ஐந்து நாள் முடிவில் ரூ.574 கோடியும், 7 நாள் முடிவில் ரூ.660 கோடியும், 8 நாள் முடிவில் ரூ.696 கோடியும், ஒன்பதாவது நாள் முடிவில் ரூ.735.02 கோடியையும் வசூலித்திருக்கிறது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த படம் இரண்டு மடங்கு வசூலை அள்ளி வெற்றியை நாளுக்கு நாள் ஈட்டி வருகிறது. இதனால் ஷாருக்கான் மற்றும் அட்லீயின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்