Categories: சினிமா

ஷாருக்கானுக்கு பரம வில்லனாக மாறிய விஜய் சேதுபதி.! அனல் தெறிக்கும் “ஜவான்” ட்ரைலர் இதோ

வெளியிட்டது

இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் இருந்து தற்போது ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லி. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து ஜவான் என்கிற படத்தை எடுத்து வருகிறார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என்று வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானுக்கு பரம வில்லனாக மாறிய விஜய் சேதுபதி.! அனல் தெறிக்கும் "ஜவான்" ட்ரைலர் இதோ 1

முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவே தொடர்ந்து விஜயை வைத்து மூன்று வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து சாதனையை நிகழ்த்திக் காட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டிற்கு சென்ற அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் தமிழின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா இருவரையும் வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பிரியாமணி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கௌரி கானும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த படம் முடிந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Red Chillies Entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்