நடிகை காஜல் அகர்வால் முதல் முதலாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வால் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார், பின்னர் தமிழில் 2008ம் ஆண்டு வெளியான “பழனி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என விஜய், அஜித், தனுஷ், சூர்யா என அனைத்து முண்ணனி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். மகதீரா என்னும் தெலுங்கு படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் தான் தமிழில் இத்தனை படங்கள் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

பின்னர் 2020ம் ஆண்டு கவுதம் என்னும் தொழிலதிபரை மணந்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் காஜல். கமல் நடிக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படத்திலிருந்து விலகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார். கர்ப்பமாக இருந்த இவர் சிறிது காலம் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

காஜலுக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருடைய கணவர் காஜலுக்கு வேற லெவல் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்து இருந்தார். அதை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதில் நள்ளிரவில் நடுக்காட்டில் கோட்டை போன்ற ஒரு இடத்தில் ராஜஸ்தானி மீல்ஸ் அவருக்காக பரிமாறப்பட்டது. இதை அவரது கணவர் அவருக்காக ஏற்பாடு செய்து இருக்கிறார். தற்போது அவர் தனது குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
