தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி முதன் முதலாக தனது மகன்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரை உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் மற்றும் இவரது அண்ணன் ஒரு இயக்குனர் ஆவார். எனவே அந்த பிரபலத்தைக் கொண்டு திரைத்துறையில் அறிமுகமான போதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 20 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பின்னால் ஜெயம் ரவியின் புகழ் மேலும் பெருகியது. ஜெயம் ரவி தற்போது அகிலன், இறைவன், பொன்னியின் செல்வன் பாகம் 2 மற்றும் சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. இந்த படங்கள் குறித்து அறிவிப்பு தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் ஜெயம் ரவி. அதில் முதன் முறையாக அவரது இரு மகன்களை காட்டி இருக்கிறார்.
மகன்கள் வளர்ந்த பிறகு வெளியாகும் முதல் புகைப்படம் இதுவாகும். ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் பெயர் ஆரவ். இரண்டாவது மகன் பெயர் அயான். இதில் முதல் மகன் ஆரவ் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் எங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் ஜெயம் ரவியும் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.! ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் அச்சு அசல் ஜெயம் ரவியை அப்படியே உரித்து வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.