Categories: சினிமா

மனைவி Aarti மீது நடிகர் Jayam Ravi போலீசில் பரபரப்பு புகார்..! அதிர்ச்சியில் சினிமா உலகம்..!

வெளியிட்டது

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக தனி ஒருவன் 2 படம் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது.

மனைவி Aarti மீது நடிகர் Jayam Ravi போலீசில் பரபரப்பு புகார்..! அதிர்ச்சியில் சினிமா உலகம்..! 1

அண்மையில் இவர் மனைவி ஆர்த்தி , ரவி உடன் எடுத்த அணைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டதாக செய்திகள் உலாவர தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஜெயம் ரவியே விவகாரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி,அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். சென்னை ஈசி ஆர் சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு அந்த புகாரில் தெரிவித்து உள்ளார் ஜெயம் ரவி. இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்