தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவர் இதற்குப் பின் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான, ராஜராஜ சோழனாக நடித்து முடித்துள்ளார். தமிழகத்தை ஆண்ட வலிமையான சோழ வம்சத்தில் மிக உயர்ந்தவராக கருதப்படுபவர் ராஜராஜ சோழன். இவர் ஆட்சிக் காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும், கிழக்கே ஒரிசா வரையும், தெற்கில் ஈழம், சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, சுமத்ரா தீவுகள் வரையும் பரவிச் சென்றது. அங்கிருந்த மன்னர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோழ தேசத்தின் ஆட்சிப் பரப்பை விரிவு செய்த பெருமை இராஜராஜ சோழனையே சேரும். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் ஜெயம் ரவி ராஜராஜசோழன் ஆக நடித்தது குறித்து பெருமிதமாக பல மேடைகளில் பேசி வந்தார். இன்று தமிழகத்தில் மட்டும் 750 திரையரங்குகளில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, படத்தில் நடித்த நடிகர்களும் காலை முதல் காட்சியிலேயே படத்தை பார்க்க வந்துள்ளனர். அதுபோல ஜெயம் ரவியும் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்ப்பதற்காக வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். இதனால் எமோஷனலான ஜெயம் ரவி செய்தியாளர்களிடம் பேசும் போது, ரசிகர்களின் ஆர்வத்தை நீங்களே பார்க்கிறீர்கள் இதைவிட என்ன வேண்டும் என்று கேட்டார்.
மேலும் தன்னுடைய படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிறது என்று மிகவும் எமோஷனலாக பேசினார். அப்போது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர். மேலும் இரண்டாவது பாகத்தில் நடித்து முடித்து விட்டீர்களா இல்லை இனிமேல்தான் நடிக்க இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, அது சஸ்பென்ஸ் என்று கூறிவிட்டு ஜெயம் ரவி சென்றார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Thanthi Tv