பிக்பாஸ் இனிமே 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆக போகுது.! புது ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி

பிக்பாஸ் இனி தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் வெளியாகும் வண்ணம் ஒரு ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் டிவியில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை தொடங்க இருக்கிறது. அக்டோபர் 9ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 துவக்க விழா நடைபெற இருக்கிறது. முதல் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே ஆறாவது சீசனையும் கமலஹாசனை தொகுத்து வழங்க இருக்கிறார். வழக்கம் போல சீசன் 6 யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற யூகங்கள் கொடிகட்டி பறந்து வருகின்றன. விஜய் டிவியின் பிரபலங்கள் பலரின் பெயரும் அதில் அடிபடுகிறது.

பிக்பாஸ் இனிமே 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆக போகுது.! புது ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி 1

விளம்பரம்

வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா மகாலட்சுமி, மதுரை முத்து, தீபா சங்கர், தர்ஷா குப்தா துள்ளுவதோ இளமை படத்தின் கதாநாயகன் அபிநய், அங்காடி தெரு படத்தின் நடித்த மகேஷ் போன்ற பலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. சீசன் 6 தொடங்க இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த புதிய புரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இனி 24 மணி நேரமும் சீசன் 6 டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்ப இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சீசன் 5 முடிந்த பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பியது.

தொடர்புடையவை  குக் வித் கோமாளியை அப்படியே காபி அடித்த சன் டிவி.! வெளியான முதல் ப்ரோமோ இதோ

பிக்பாஸ் இனிமே 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆக போகுது.! புது ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி 3

விளம்பரம்

கடந்த ஐந்து சீசன்களை இதுபோல் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பியது கிடையாது. ஒரு மணி நேர நிகழ்ச்சியை மட்டுமே ஹாட்ஸ்டாரில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. தற்போது சீசன் 6 முழுவதுமாக 24 மணி நேரமும் ஒளிபரப்பு இருக்கிறது விஜய் டிவி. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Disney + Hotstar

விளம்பரம்

Leave a Comment