இன்று உலகம் எங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். புது பானையில் பொங்கலிட்டு, புத்தாடை உடுத்தி, கரும்பு, வெல்லம், பச்சரிசி, புது காய்கறிகள் என இறைவனுக்கு படையலிட்டு சூரியனை வழிபட்டு வருகின்றனர்.

மக்கள் மட்டுமில்லாமல், நடிகர்கள் பலரும் தற்போது பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தனது மகன்களுடன் இன்று பொங்கல் தினத்தை கொண்டாடி இருக்கிறார். அந்த அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் 2003ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவரது தந்தை ஒரு தயாரிப்பாளர் மற்றும் இவரது அண்ணன் ஒரு இயக்குனர் ஆவார்.
அந்த பிரபலத்தைக் கொண்டு திரைத்துறையில் அறிமுகமான போதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’, ‘கோமாளி’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தியிருந்தார் . இந்த படத்திற்கு பின்னால் ஜெயம் ரவியின் புகழ் மேலும் பெருகியது. ஜெயம் ரவி தற்போது ‘அகிலன்’, ‘இறைவன்’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ மற்றும் சைரன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில் சைரன் தவிர அனைத்து படங்களும் ரிலீஸ் ஆகி விட்டது.
இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஜெயம் ரவி பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.