தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டுப் பெண் தற்போது கோபத்தில் ரசிகர்களிடையே வந்து கத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்காக அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்று வருகிறார். ‘வேட்டையன்’ படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக அவ்வப்போது நாகர்கோவில் சென்று வருகிறார். இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தன்று அவர் ஊரில் இல்லை, படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என்று எந்த பண்டிகையானாலும் ரஜினியின் இல்லத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெறுவதை ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர் வீட்டு முன்பு நின்று கோஷம் இடுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது ரஜினிகாந்த் வெளியில் வந்து தனது தொண்டர்களுக்கு கை அசைத்து வாழ்த்து சொல்லிவிட்டு செல்வதும் வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தன்று தனது தலைவரை காண்பதற்காக ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக நின்று கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி மிகுந்த டென்ஷனாகி வெளியில் வந்து கத்தி இருக்கிறார்.

வெளியில் வந்த ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி, “நாங்களும் வரி கட்டுகிறோம், எல்லாம் செய்கிறோம் ஆனால் எங்களுக்கு எந்தவிதமான சலுகையும் கிடைக்க மாட்டுகிறது. ஆனால் இப்படி ஒரு நல்ல நாள் அதுவுமாக காலம் காத்தாலையே வந்து கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் முழுவதுமாக வேதனையின் உச்சத்திற்கே சென்று விட்டோம்” என்று அவர் பேசும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: News Tamil 24*7