ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவியின் பிறந்தநாளை தற்போது நண்பர்கள் அனைவரும் இணைந்து அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர். மனைவியின் பிறந்த நாளிற்கு இரவு நேர பாட்டி வைத்து ஜெயம் ரவி அமர்க்களப்படுத்தி இருக்கிறார். அந்த பார்ட்டிக்கு கீர்த்தி சுரேஷ், குஷ்பூ மகள்கள் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் திரை உலகில் ஜெயம் என்ற படத்தில் மூலமாக அறிமுகமாகி இன்று மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவருக்கும் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
அன்று தொடங்கி இவரது பெயர் ஜெயம் ரவி என்று மாறிப்போனது. திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 25 படங்கள் வரை தான் நடித்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அவர் கூறியது, தனக்கு நல்ல கதை வந்தால் மட்டுமே தான் நடிப்பேன், படம் கிடைக்கிறது என்று அனைத்து கதைகளிலும் தான் நடிப்பதில்லை. கதையை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்று பேசியிருந்தார்.
இதனால் தான் ஜெயம் ரவிக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கதையை கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் படத்திற்கு பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், அடங்கமறு கோமாளி போன்ற பல நல்ல படங்களில் நடித்த முடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக அகிலன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
அதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்கிற கதாபாத்திரத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் செல்வாக்கு மளமளவென உயர்ந்தது. தற்போது ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிலும் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு ஆர்த்தி என்கிற ஒரு மனைவி இருக்கிறார். மேலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகன் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மனைவியுடன் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜெயம் ரவி. இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் எப்பொழுது நீங்கள் உங்கள் மனைவியுடன் இணைந்து படத்தில் நடிக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆர்த்தியும் பார்ப்பதற்கு நடிகை போல இருப்பதால் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடி இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு இரவு நேரம் பார்ட்டி வைத்து சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் ஜெயம் ரவி.
இந்த நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ், மிர்ச்சி சிவா குஷ்புவின் மகள்கள் அனந்திதா மற்றும் அவந்திகா ஆகிய அனைவரும் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.