Categories: சினிமா

ஜிகர்தண்டா 2 படம் பற்றி தரமான அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.! டீசர் பற்றிய முக்கிய அப்டேட்

வெளியிட்டது

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டீசர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜிகர்தண்டா 2 படம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படம் நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் படத்திலிருந்து எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.

ஜிகர்தண்டா 2 படம் பற்றி தரமான அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.! டீசர் பற்றிய முக்கிய அப்டேட் 1
எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டதாகவும், திலீப் சுப்பராயன் இந்த காட்சியை படமாக்கியதாகவும் தமிழ் திரையுலகிலேயே இந்த ஸ்டன்ட் காட்சியை வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர் ரக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் ரசிகர்களுக்கு புதுவித விருந்தாக அமையும் என்றும் கூறப்பட்டது. படம் முடிவடைந்து பல நாட்கள் ஆன பின்பும் எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் புது அப்டேட்டை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருக்கிறார்.


ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அடுத்த பாகமும் அதே போல் வெற்றியடைய வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர். கார்த்தியின் அடுத்த படம் ஜப்பான் திரைப்படத்துடன் ஜிகர்தண்டா 2ம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி மதியம் 12 மணி 12 நிமிடங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, சபிக் அகமது படத்தொகுப்பை செய்து இருக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்தி சுப்புராஜ் படத்தை தயாரித்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்