கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரையை மையமாக வைத்து உருவான படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் அந்த படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான தேசிய விருதில் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார். பல பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகமும் குறித்து அறிவிப்பை சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்தார். ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி உள்ளது. படத்தின் நடிகர்கள் அறிவிக்கப்படாத நிலையில் மவுத்தார் கன்னுடன் சர்ப்ரைஸ் ஆக என்று கொடுக்கிறார் எஸ் ஜே சூர்யா. பின்னர் அவரைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் கொல்லப் பட்டறையில் அமர்ந்து எதையோ அடித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யாவை நோக்கி நகர்கிறார். அதன் பின்னர் பெரிய படையே எஸ்.ஜே சூர்யாவின் பின்னால் இருந்து ராகவா லாரன்ஸை நோக்கி வருகிறது. ஆனால் அதற்கு பயப்படாமல் கெத்தாக நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். அதன் பின்னர் கட் செய்து ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் என்று பெயர் வருகிறது.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் இருவரும் இணைந்து ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். செம்ம மாஸ்ஸாக வெளியாகி இருக்கும் அந்த டீசரை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Think Music India.