என் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.! நடராஜன் சொன்ன தகவல்.!

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் மீண்டும் நன்றாக விளையாடி என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி திரும்பவும் இந்திய அணியில் பங்கேற்றப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். தமிழகத்திலிருந்து சேலம் மாவட்டத்தில் இருந்து எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடராஜன். இவர் இந்திய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு அந்த இலக்கை அடைந்திருக்கிறார். கிராமப்புறங்களில் இருந்து வரும் பல இளைஞர்களுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்கிறார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தாயார் தள்ளு வண்டியில் சிக்கன் 65 தொழில் நடத்தி தான் இவரை படிக்க வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.! நடராஜன் சொன்ன தகவல்.! 1

விளம்பரம்

தற்போது அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக நடிப்பார் என்று பேசியிருக்கிறார் நடராஜன். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாரத்தான் என்பது அனைவருக்கும் முக்கியமானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாறத்தானில் ஓட வேண்டும். உடல் வலிமையை மன வலிமையை இது அதிகரிக்கும். அனைத்து விளையாட்டிற்கும் ஓட்டம் என்பது முக்கியம் அதற்கு மரத்தான் எப்போதும் துணையாக இருக்கும் என்று பேசினார். கிராமப்புறங்களில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். என்னை போல் பல இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றும் பேசினார்.

தொடர்புடையவை  சிகப்பு நிறப் புடவையில் தேவதை போல வந்து நடனம் ஆடிய ஹன்சிகா.! வைரல் வீடியோ.!

என் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.! நடராஜன் சொன்ன தகவல்.! 3

விளம்பரம்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடுவேன் என்றும் மீண்டும் எனது திறமையை காண்பிப்பேன் என்றும் அவர் பேசினார். மீண்டும் இந்திய அணியில் பங்கேற்று விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் கட்டாயம் எடுக்கப்படும் அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்த படம் உருவாகலாம். கண்டிப்பாக அவர்தான் நடிப்பார் அவரே இந்த படத்தை தயாரிக்கவும் இருக்கிறார் என்று நடராஜன் பேசினார். ஒருவேளை இவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அது பல இளைஞர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.! Watch the Below Video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Common Man

விளம்பரம்

Leave a Comment