பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஜோவிகா சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர்.! புகைப்படம் உள்ளே.!

வெளியிட்டது

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஜோவிகா தன்னுடன் விளையாடிய சகப் போட்டியாளர் ஒருவரை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படங்களை ஜோவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி 70 நாட்களை முடித்து விட்டது. நாளை முதல் இன்னமும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஜோவிகா சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர்.! புகைப்படம் உள்ளே.! 1

இன்னமும் 13 போட்டியாளர்கள் மீதமிருக்கும் நிலையில் நிகழ்ச்சி முடிவடைய 30 நாட்களே மீதம் இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகி இருப்பதால் வரும் வாரங்களில் இரட்டை வெளியேற்றம் மூலம் போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க பிக் பாஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.


இந்தப் போட்டியில் வனிதாவின் மகள் ஜோவிகா ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். வனிதாவின் மகள் என்று அடையாளத்துடன் நுழைந்த அவர், சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என்று பலரும் எண்ணி இருந்தனர். 19 வயதே ஆன ஜோவிகா தனது விளையாட்டை சிறப்பாக ஆடி முதல் சில வாரங்களில் முன்னணி போட்டியாளராக திகழ்ந்து கொண்டிருந்தார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாயா, பூர்ணிமா உடன் இணைந்து இவர் செய்த சில வேலைகள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரதீப்பின் ரெட் கார்டு விஷயத்திலும் ஜோவிகா மீது மக்களுக்கு கோபம் இருந்தது. எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பது, தமிழ் தெரியாமல் தவறாக எழுதுவது போன்ற செயல்களால் வெளியில் பல ட்ரோல்களுக்கு ஆளானார் ஜோவிகா.


பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் உருக்கமாக கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி இருந்தார் ஜோவிகா. அதில் தன்னை இத்தனை நாட்களாக ஆதரித்த அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக கடிதத்தை எழுதியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான பிராவோவை இன்று சென்று சந்தித்திருக்கிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்று அவர்கள் பிரியாணி சாப்பிட்டு ரீ யூனியன் செய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிராவோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்