சூப்பர் சிங்கர் 9 – ரூ.60 லட்சத்தை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா.? விவரம் உள்ளே.!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9ன் வெற்றியாளர் யார்? என்பது தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்கிற அடையாளத்துடன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல சூப்பர் சிங்கர் சீனியரும் ஒன்பது சீசன் வரை முடித்திருக்கிறது.

சூப்பர் சிங்கர் 9 - ரூ.60 லட்சத்தை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா.? விவரம் உள்ளே.! 1

விளம்பரம்

தற்போது இந்திய அளவில் ஒளிபரப்பாகி வரும் பல பாட்டு நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமாக இருந்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்த நிலையில் சீசன் 9ல் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வழக்கம் போல சித்ரா போட்டியின் நடுவராக பங்கேற்க, தமன் மற்றும் அந்தோணி தாசன் இருவரும் துணை நடுவர்களாக பங்கேற்று இருந்தனர். இன்று இறுதிக்கட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

சூப்பர் சிங்கர் 9 - ரூ.60 லட்சத்தை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா.? விவரம் உள்ளே.! 3
பல திறமையான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்தது போலவே ஸ்ரீநிதா டைட்டிலை வென்றிருக்கிறார். அவருக்கு ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வைக்கம் விஜயலட்சுமி மற்றும் தீ போன்றவர்களை குரலை மிமிக்ரி செய்து பலரின் மனங்களில் இடம் பிடித்த ஹர்ஷினி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவருக்கு ரூ.10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தையாக இருந்த போதிலும் பல லட்சம் மனங்களை கொள்ளை கொண்ட அக்ஷர லக்ஷ்மி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு ரூபாய் ரூ.5 லட்சத்தை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாலையும் கழுத்துமாக வந்து நின்ற வேதா.! அதிர்ச்சியில் உறைந்து போன காவேரி.!

சூப்பர் சிங்கர் 9 - ரூ.60 லட்சத்தை தட்டி தூக்கிய அந்த போட்டியாளர் யாருனு தெரியுமா.? விவரம் உள்ளே.! 5
சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்த கையோடு தற்போது சூப்பர் சிங்கர் சீனியருக்கான தேடல் தொடங்கி இருக்கிறது. விரைவில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment